பிக்பாஸ் ஏடாகூட டாஸ்குகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பேர் போன நிகழ்ச்சியாகவே ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. தமிழ் பிக்பாஸ் மட்டுமல்ல, பிக்பாஸ் ஆங்கிலத்தில் ஆரம்பித்ததில் இருந்தே சர்ச்சைகளும் கொடூர டாஸ்குகளுமாகவே நடந்துகொண்டிருக்கிறது. எந்தெந்த மொழிகளில் பிக்பாஸ் வந்தாலும் இந்த ஏடாகூட பிக்பாஸ் டாஸ்குகள் இருந்தே தீரும்.
பிக்பாஸ் எலிமினேஷனில் நீங்கள் இடம்பிடிக்காமல் இருக்க, உங்களுக்கு ஒரு சாய்ஸ். ஒரு பக்கம் முழுக்க தலைமுடி, மீசை, தாடி என அனைத்தையும் மழித்துவிட்டு பிக்பாஸ் வீட்டில் வலம் வர வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க். இந்த டாஸ்கிற்கு நீங்கள் தயாரா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அத்தனை போட்டியாளர்களும் பின்வாங்க ஒரே ஒரு போட்டியாளர் முன்வருகிறார். தன் தாய்க்காக கூட மொட்டையடிக்காத அவர் அரை மொட்டையுடன் கண்கலங்க நிற்கிறார்.
என்னய்யா கதை விடுற, இப்படி ஒரு டாஸ்க் பார்க்கலையே என நினைக்கிறீர்களா?

இது நடந்தது தெலுங்கு பிக்பாஸில்…
தெலுங்கு பிக்பாஸ் ஹோஸ்ட் நாகார்ஜூனா கிட்டத்தட்ட கொலைவெறியுடன் இந்த கொடூர டாஸ்கை எடுத்துச் சொல்ல, ‘மாஸ்டர் அம்மா ராஜசேகர்’ இந்த கொடூர டாஸ்க்கை ஏற்கொண்டார். அவர் தாய்க்காக கூட மொட்டை அடித்ததில்லை என்றாலும் இந்த டாஸ்கிற்கு ஓகே சொன்னார்.
தலைவரான நோயலை ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் ட்ரிம்மரை எடுத்து மொட்டையடிக்க சொல்லி நாகார்ஜூனா சொல்ல, சில நிமிட அழுகாச்சிக் காட்சிகளுக்குப் பிறகு நோயல் மொட்டை அடித்துவிடப்பட்டார்.
ஆக, மொடையடிக்கும் டாஸ்க் தெலுங்கில் வெற்றிகரமாக முடிந்தது. இப்படி ஒரு டாஸ்க் பிக்பாஸ் தமிழில் கொண்டு வரப்பட்டால், இந்த டாஸ்க்கை யார் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க.
Leave a Reply