மொட்டை மாம்ஸ் சுரேஷ் தான் இந்த சீசனில் முழுவதுமாக பிக்பாஸ் போட்டியாளர்களைப் பற்றி ஸ்டடி செய்து வந்திருக்கிறார் போலிருக்கிறது. பக்காவாக பிளான் செய்து வந்திருக்கிறார். ஆரம்பித்திலிருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களைப் பற்றி சரியாக கணித்து ஆடினார். அதே போல், சோகக்கதை சொல்லச் சொன்ன போதும், மற்றவர்களைப் போல் சீரியல் டிராமா அழுகையைப் போடாமல், தன் மகனுக்கு நடந்த புற்றுநோய் ஆப்பரேசனை ஜஸ்ட் லைக் தட் சொல்லிச் சென்றார். அவரின் சமீபத்திய கண்டுபிடிப்பு அர்ச்சனா மராத்தி என்பது.சற்றே ஷாக்கான அர்ச்சனா […]