பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் முடியப்போகிறது. முதல் வாரம் எவிக்ஷன் இல்லை என்ற அறிவிப்பு நடந்தது.
முந்தைய சீசன்களைப் போலவே இந்த சீசனில் சில பல பஞ்சாயத்துகள் இனிதே நடந்தேறியது. வனிதாவைப் போல அனிதா உருமாறியது முதல், கஸ்தூரியைப் போல அர்ச்சனா உள்ளே வந்து அதட்டல் காட்டியது வரை முதல் இரண்டு வாரங்கள் இப்போது முடியப்போகிறது.
இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. தற்போது அரசல்புரசலாக பிக்பாஸ் இன்சைடர்களால் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் ரேகா.

ரேகாவின் செயல்பாடுகளும் இந்த இரண்டு வாரங்களில் அப்படி சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிதாக எதுவும் இல்லை. இந்த முடிவு பெரிதாக ஏதும் அதிர்ச்சியையும் கிளப்பாது.
யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை நிகழ்ச்சியில் முழுதாகப் பார்த்து விடலாம்.
Leave a Reply